பாதுகாப்பு அமைச்சகம்
எவரெஸ்ட் மற்றும் கஞ்சன்ஜங்கா சிகரங்களுக்கு மலையேற்ற குழுவினரைப் பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
प्रविष्टि तिथि:
03 APR 2025 1:25PM by PIB Chennai
எவரெஸ்ட் (8848 மீட்டர்) மற்றும் கஞ்சன்ஜங்கா (8586 மீட்டர்) சிகரங்களுக்கு மலையேற்றக் குழுவினரைப் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் தென்பகுதியில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஏப்ரல் 03) கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
எவரெஸ்ட் மலையேற்றக் குழுவில் இந்திய ராணுவத்தின் 34 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவிற்கு லெப்டினென்ட் கலோனல் மனோஜ் ஜோஷி தலைமை தாங்குகிறார். இந்தியா- நேபாள கூட்டு மலையேற்றக் குழுவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்களும், நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவிற்கு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கலோனல் சர்ஃபராஸ் சிங் தலைமை வகிப்பார்.
இத்துடன் கலோனல் அமித் பிஷ்த் தலைமையில் கூட்டு என்சிசி குழுவினர் எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபடவுள்ளனர். இக்குழுவில் 5 பெண்கள், 5 ஆண்கள், 4 அதிகாரிகள், 11 நிரந்தர பயிற்றுநர்கள் பங்கேற்பார்கள். இம்மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் பயணம் 2025 மே மாதத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட சிகர உச்சிகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய நிகழ்வில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் அனில் சௌகான், ராணுவ தலைமைத் தளபதி ஜென்ரல் உபேந்திர துவிவேதி, இந்தியாவுக்கான நேபாள தூதர் டாக்டர் சங்கர் பி சர்மா, நேபாள தூதுக்குழுவினர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2118162)
TS/SMB/AG/SG
(रिलीज़ आईडी: 2118231)
आगंतुक पटल : 37