தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தென்னிந்திய திரைப்பட சங்கங்களுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காணொலிக் காட்சி வாயிலாக சந்திப்பு
வேவ்ஸ் 2025 இல் தென்னிந்திய மாநிலங்களுக்கு வலுவான பிரதிநிதித்துவம் தேவை: டாக்டர் எல்.முருகன் கோரிக்கை
வேவ்ஸ் 2025 இல் தென்னிந்திய திரையுலகிற்கு பிரத்யேக அரங்கம் அமைக்க டாக்டர் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
02 APR 2025 6:47PM by PIB Chennai
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்பட சங்கங்களின் அதிகாரிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காணொலிக் காட்சி வாயிலான சந்திப்பை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, இணைச் செயலாளர் திரு சி.செந்தில் ராஜன், திரைப்படங்கள் பிரிவின் இணைச் செயலாளர் டாக்டர் அஜய் நாகபூஷண் எம்.என் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
2025 மே 1 முதல் 4 வரை நடைபெறவுள்ள உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (வேவ்ஸ்) முன்னேற்றம் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட தென்னிந்திய திரைப்படத் துறையின் அதிகபட்ச பங்களிப்பின் அவசியத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் வேவ்ஸ் கண்காட்சியில் ஒரு பிரத்யேக அரங்கை நிறுவுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அனைத்து ஊடகப் பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதை வேவ்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். படைப்பாற்றல் துறையில் உலகத் தலைமையாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமையும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2117966
***
(Release ID: 2117966)
RB/DL
(Release ID: 2118054)
Visitor Counter : 16