பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாம்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2025 4:36PM by PIB Chennai
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் குறைகளைத் தீர்ப்பதற்காக ஓய்வூதிய முகாம்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமைச்சகம் வாரியாக / துறை வாரியாக தரவு தொகுப்புகள் பராமரிக்கப்படுகின்றன மற்றும் மாநில வாரியான தரவு தொகுக்கப்படவில்லை. பாதுகாப்பு, ரயில்வே, தொலைத்தொடர்பு, நிதி, உள்துறை, சிஏஜி அலுவலகம் போன்ற முக்கிய அமைச்சகங்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக கடந்த 05 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓய்வூதிய முகாம்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன:
ஓய்வூதியம் தொடர்பான நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்காக எதிர்காலத்தில் கூடுதல் ஓய்வூதிய முகாம்களை நடத்தவும் அரசு உத்தேசித்துள்ளது.
ஓய்வூதிய முகாமின் நோக்கம் தீர்க்கப்படாத மற்றும் நீண்டகால குறைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காண்பதாகும்.
ஓய்வூதியர் முகாம்களில் எடுத்துக் கொள்ளப்படும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117816
----
TS/IR/AG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2117942)
வருகையாளர் எண்ணிக்கை : 44