பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் 7-வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. பழங்குடியினர் கல்விக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2025 1:24PM by PIB Chennai
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (நெஸ்ட்ஸ்) அதன் 7-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மாணவர்களின் கல்வி மற்றும் அதிகாரமளித்தலுக்கான செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. மத்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் 2019-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தச் சங்கம், ஏகலைவா மாதிரி உண்டுஉறைவிடப் பள்ளிகளின் நிர்வாகத்தின் மூலம் பழங்குடியின சமூகங்களுக்கான கல்வியை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆகாஷ்வானி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு ஜுவல் ஓரம், அத்துறைக்கான இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே, பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்
திரு அந்தர் சிங் ஆர்யா, மற்றும் அமைச்சகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற தரப்பினர் கலந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டங்களில் பழங்குடியின மக்களுக்கான கல்வி குறித்த உரைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பதில் இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டன.
இந்த விழாவில் உரையாற்றிய பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சர் திரு ஜுவல் ஓரம், பழங்குடியினர் கல்வியை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117667
***
TS/SV/KPG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2117817)
வருகையாளர் எண்ணிக்கை : 63