மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
வங்காள விரிகுடாவில் மீன்பிடி நடைமுறைகள்
Posted On:
01 APR 2025 3:31PM by PIB Chennai
வங்காள விரிகுடா கடல் பகுதி உட்பட நாட்டின் தனிப் பொருளாதார மண்டலத்தில் நிலையான மீன்வள நடைமுறைகளை உறுதி செய்ய மத்திய அரசின் மீன்வளத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும், ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும் 61 நாட்களுக்கு ஒரே மாதிரியான மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவதும் இதில் அடங்கும். வங்காள விரிகுடா பகுதி உட்பட கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் இதேபோன்ற மீன்பிடி தடைக்காலம் பிராந்திய கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்தில், சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய, மீனவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவிகளுக்காக மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
வங்காள விரிகுடா பகுதி உட்பட நாடு முழுவதும் பொறுப்பான மற்றும் நிலையான மீன்பிடி நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் தேசிய கொள்கை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிப்பதற்கு டிராலிங் மற்றும் செயற்கை விளக்குகள் ,எல்.ஈ.டி விளக்குகளைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் பிராந்திய கடல் எல்லைக்குள் இதேபோன்ற தடைகள் விதிக்கப்படுகின்றன. மேலும், மாநில அரசு, அந்தந்த கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிகளில் (திருத்தங்கள்) மேற்கொண்டு கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117252
----
TS/SV/KPG/SG
(Release ID: 2117328)
Visitor Counter : 18