கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய கூட்டுறவு கொள்கை

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2025 1:46PM by PIB Chennai

மத்திய கூட்டுறவு அமைச்சகம் புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திரு சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில் கூட்டுறவுத் துறையின் வல்லுநர்கள், தேசிய/மாநில/மாவட்ட/தொடக்க அளவிலான கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர் (கூட்டுறவு) மற்றும் பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட தேசிய அளவிலான குழு ஒன்று 2.9.2022 அன்று அமைக்கப்பட்டது. இக்குழு 17 கூட்டங்களை நடத்தி நாடு முழுவதும் நான்கு மண்டல பயிலரங்குகளை நடத்தி பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றது. பெறப்பட்ட ஆலோசனைகள் உரிய வகையில் வரைவுக் கொள்கையில் இணைக்கப்பட்டுள்ளன. வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

***

(Release ID: 2117197)
TS/PKV/RR/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2117243) வருகையாளர் எண்ணிக்கை : 92
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi