ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: பட்டு உற்பத்தி விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆதரவு உதவிகள்

प्रविष्टि तिथि: 01 APR 2025 10:07AM by PIB Chennai

பட்டு சமக்ர-2 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசு நாட்டில் பட்டு வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கும், பட்டு விவசாயிகள், நெசவாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் ஆதரவை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 78,000 பயனாளிகளுக்காக மாநில அரசுகளுக்கு ரூ.1,074.94 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கைத்தறித் துறையால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் வழங்கல் மூலம் பட்டு கைத்தறித் தொழிலாளர்கள் உட்பட கைத்தறித் நெசவாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

உற்பத்தி மேம்பாடு, தர மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி, சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவை உலகளாவிய தலைமை இடத்தில் நிலைநிறுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

***

(Release ID: 2117109)

TS/GK/AG/SG


(रिलीज़ आईडी: 2117188) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia