ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளி ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் முன்முயற்சிகள்

प्रविष्टि तिथि: 01 APR 2025 10:08AM by PIB Chennai

ஜவுளித் துறைக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. நெசவாளர்களால் உருவாக்கப்படும் ஆடைகள், துணிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறை தயாரிப்புகளின் உற்பத்தியை ஊக்குவித்து, போட்டித்தன்மையை அதிகரிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஜவுளித்துறைக்கு தோராயமாக 22 சதவீதமானது உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பூஜ்ஜிய மதிப்பீட்டு ஏற்றுமதி கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் தள்ளுபடி  திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வர்த்தக கண்காட்சிகள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்து சந்தை அணுகல் முயற்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வர்த்தக அமைப்புகளுக்கு அரசு நிதி உதவியை வழங்குகிறது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

***

(Release ID: 2117110)

TS/GK/AG/SG

 


(रिलीज़ आईडी: 2117187) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी