ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: 2024-2025-ம் ஆண்டில் கச்சாப் பட்டு உற்பத்தி

Posted On: 01 APR 2025 10:08AM by PIB Chennai

2024-25 நிதியாண்டிற்கான திட்டமிடப்பட்ட கச்சாப் பட்டு உற்பத்தி இலக்கு, 2024-25 நிதியாண்டிற்கான ஜனவரி  வரை அதிகரித்துள்ளது. மாநில அரசுகளால் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் 2014-15 நிதியாண்டில் 24,299 மெட்ரிக் டன்னில் இருந்து 2024-25 ஜனவரி மாதம் வரை 34,042 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பிராந்திய ஜவுளி ஊக்குவிப்புத் திட்டம் (NERTPS), பட்டுத் தொழில் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISDSI), பட்டு சமக்ரா மற்றும் பட்டு சமக்ரா-2 போன்ற மத்திய  அரசின் திட்டங்களால் நாட்டில் கச்சா பட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஜனவரி 2025 வரை கச்சா பட்டு உற்பத்தியின்படி பட்டுத் துறையில் 80.90 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள், இதில் 71.2 லட்சம் பேர் நேரடியாகவும், 9.7 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்தார்.

***

(Release ID: 2117111)

TS/GK/AG/SG


(Release ID: 2117184) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Bengali