ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்டுத் துறையின் வளர்ச்சி

Posted On: 01 APR 2025 10:09AM by PIB Chennai

2021-22-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை நாட்டில் பட்டுத் தொழிலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ரூ.4,679.85 கோடி மதிப்பீட்டில் மத்திய பட்டு வாரியத்தின் மூலம் அரசு பட்டு சமக்ரா-2 திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கள அளவிலான நடைமுறைகளைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அவற்றில் கிசான் நாற்றங்கால் அமைத்தல், பட்டுப்புழு வளர்ப்பு தொகுப்பு உதவிகள் (மரம் நடுதல், நீர்ப்பாசனம், புழுவளர்ப்பு வீடு, பட்டுப்புழு வளர்ப்புக்கான உபகரணங்கள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்). பட்டுக்கூடு அமைப்பதற்கு இளம்புழு வளர்ப்பு மையங்களை நிறுவுதல், பட்டுப்புழு விதைத் துறைக்கு ஆதரவு, உள்கட்டமைப்பு சார்ந்த செயல்பாடுகள், பட்டு நூற்பு, நெசவு, பதனிடும் உதிரி பாகங்கள் ஆகியவை பட்டுக்கூடு அறுவடைக்கு பிந்தைய தொழிலுக்கான நடவடிக்கைகளாகும். 

பட்டு வளர்ச்சித் துறையின் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மைக்காக பட்டுக்கூடு அமைப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செயல்பாடுகள் / இயந்திரங்களை உள்ளடக்கிய பயனாளிகள் சார்ந்த அம்சங்களை செயல்படுத்துவதற்காக, பட்டு சமாக்ரா-2 திட்டத்தின் கீழ் சுமார் 78,000 பயனாளிகளை உள்ளடக்கிய வகையில் இதுவரை ரூ.1,075.58 கோடி மத்திய அரசின் நிதியுதவியாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம், பட்டுத் துறையில் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய பட்டு உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117113

----

TS/SV/KPG/SG


(Release ID: 2117182) Visitor Counter : 23


Read this release in: Telugu , English , Urdu , Hindi