சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சுற்றுச்சூழல் குறித்த தேசிய மாநாடு – 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்
Posted On:
29 MAR 2025 6:56PM by PIB Chennai
'சுற்றுச்சூழல் – 2025' குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். தொடக்க அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதிபதி விக்ரம் நாத், இந்தியாவின் அட்டார்னி ஜெனரல் திரு ஆர் வெங்கடரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதையும், பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டில், முக்கிய பிரமுகர்கள், சட்ட வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.
தொடக்க அமர்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அழிவைத் தடுக்கும் அதே நேரத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான நமது பொறுப்பில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வரும் தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழலை வழங்குவது நமது தார்மீகப் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், 'சர்வே பவந்து சுகினா:' என்ற மந்திரத்தை மேற்கோள் காட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்திய பண்பாட்டில் உள்ளது என்று வலியுறுத்தினார். இது தாவரங்கள், விலங்கினங்கள், மலைகள், ஆறுகள் மற்றும் சுற்றுச்சூழலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
நமது தேசிய சூழ்நிலைகளின் அடிப்படையில் பொறுப்புடன் வளரும் உரிமையை இந்தியா கொண்டுள்ளது என்று திரு யாதவ் கூறினார். பருவநிலை நடவடிக்கைக்கான நமது உறுதிப்பாட்டைக் காட்டும் வகையில், 2030 இலக்குக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே பசுமை எரிசக்தி குறித்த பாரிஸ் ஒப்பந்த உறுதிமொழிகளை இந்தியா நிறைவேற்றியுள்ளது. உலகைப் பீடித்துள்ள காலநிலை கவலை, அதன் 140 கோடி மக்களுக்கு உணவு, நீர், ஆற்றல் மற்றும் தரத்தை உறுதி செய்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் மேலும் வலியுறுத்தினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இடையே சமநிலையை நம்பிக்கையுடன் உருவாக்கி வருகிறது eதிரு தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116631
**********
BR/KV
(Release ID: 2116837)
Visitor Counter : 15