பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலங்கை சோசலிச குடியரசின் சிவில் அதிகாரிகளுக்கான நிகழ்ச்சித்திட்டம் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 29 MAR 2025 12:26PM by PIB Chennai

 

இலங்கை  சிவில் அதிகாரிகளுக்கான 7- வது திறன் கட்டியெழுப்பும் திட்டம் 2024 மே 27 அன்று புதுடில்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கையைச் சேர்ந்த 40 மூத்த சிவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிருவாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில், இந்தியாவில் டிஜிட்டல் ஆளுகையின் முக்கிய அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை மேம்படுத்துவதில் அதன் பங்கை எடுத்துரைத்தார்பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்தும் விவாதித்த அவர், தடையற்ற குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் அதன் தாக்கத்தை வலியுறுத்தினார்.

"அதிகபட்ச ஆளுமை, குறைந்தபட்ச அரசு" என்ற கொள்கையை அவர் விளக்கினார். இது நிர்வாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதையும், குறைந்தபட்ச அதிகாரத்துவ தலையீட்டுடன் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குடிமைப் பணியாளர்களிடையே திறன் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் முன்னோடி முன்முயற்சியான மிஷன் கர்மயோகி குறித்தும் அவர் பேசினார். ஆளுமையில் உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கத்தை வளர்ப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116530.

***

PKV/KV

 


(रिलीज़ आईडी: 2116622) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali