விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு
प्रविष्टि तिथि:
28 MAR 2025 5:00PM by PIB Chennai
விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும், வேளாண் துறையில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
பிரதமரின் வேளாண் நிதி ஆதரவு திட்டம் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில், 'கிசான் இ-மித்ரா' என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கணினி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தினமும் 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கேள்விகளை எதிர்கொள்கிறது. இதுவரை, 92 லட்சத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைபொருள் இழப்பை சமாளிக்கவும், பூச்சித் தொற்றைக் கண்டறிந்து, பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116212
***
SV/GK/RJ /DL
(रिलीज़ आईडी: 2116417)
आगंतुक पटल : 68