பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 28 MAR 2025 3:25PM by PIB Chennai

வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுக்கான தொழிலாளர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நடத்தி வருகிறது.  வருடாந்தர கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, 2021-22 முதல் 2023-24 வரை 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கான மதிப்பிடப்பட்ட தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2023-24-ம் ஆண்டில் 41.7 சதவீதமாக உள்ளது.

இது தொழிலாளர் துறையில் ஆண்டுதோறும் பெண்களின் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. மேலும் அதிகரிக்கும் வகையில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் அங்கீகரித்து, மகளிர் தொழில்முனைவோரை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 1,57,066 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 73,000-க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கையில் பெண்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும். இந்தத் திட்டங்களின் கீழ் பெரும்பாலான பெண்களே பயனடைந்து வருகின்றனர்.

இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116144

***

SMB/GK/RJ/KR


(रिलीज़ आईडी: 2116253) आगंतुक पटल : 86
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali