வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0 குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை தாங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAR 2025 3:11PM by PIB Chennai
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு 2025 மார்ச் 27 அன்று மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை வகித்தார்.
நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதும் எதிர்காலத்திற்கு திட்டமிடுதலும் இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
இந்தக் கூட்டத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு தோக்கன் சாகு, இத்துறையின் செயலாளர் திரு ஸ்ரீனிவாச கதிகலா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர், தூய்மை என்பது ஒரு முறை மட்டுமான முயற்சி அல்ல என்றும் நீடித்த கவனமும், புதிய கண்டுபிடிப்பும், பொதுமக்கள் பங்கேற்பும் கொண்ட தொடர்ச்சியான நடைமுறை என்றும் கூறினார்.
நகர்ப்புற துப்புரவில் உலக அளவிலான சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துமாறு கூறிய அமைச்சர் செயல்பாட்டில் நகரங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116136
***
SMB/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2116162)
வருகையாளர் எண்ணிக்கை : 58