தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய அரசின் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம், குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு 5 ஜி ஆய்வகத்தை நிறுவியுள்ளது
Posted On:
27 MAR 2025 5:08PM by PIB Chennai
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு 5ஜி ஆய்வகத்தை நிறுவியுள்ளது. இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 5ஜி அமைப்பில் நடைமுறை நுண்ணறிவுகளைப் பெற உதவுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் இந்த மையம் உதவுகிறது. புதிய 5ஜி பயன்பாட்டு நடைமுறைகளை ஆராயும் போது திறன்களையும் 6ஜி தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சிக்கான அடித்தளத்தையும் வழங்குகிறது.
நாட்டில் குறைக்கடத்திகள், மின்னணு தொடுதிரை ஆகியவற்றின் உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக மொத்தம் ரூ.76,000 கோடி செலவில் செமிகான் இந்தியா திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அசாமின் மோரிகானில் ரூ.27,120 கோடி முதலீட்டில் நாளொன்றுக்கு 48 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி திறன் கொண்ட வெளிப்பணி ஒப்படைப்பு குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அசாமில் கிராமப்புறங்களில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
***
TS/PLM/KPG/DL
(Release ID: 2115927)
Visitor Counter : 33