கலாசாரத்துறை அமைச்சகம்
மென் சக்தியாக கலாசாரத்தை ஊக்குவித்தல்
Posted On:
27 MAR 2025 4:12PM by PIB Chennai
இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை சர்வதேச அளவில் மேம்படுத்தவும், இந்தியாவின் உலகளாவிய தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தவும் கலாச்சார அமைச்சகம் "உலகளாவிய ஈடுபாட்டு திட்டத்தை" செயல்படுத்துகிறது.
அயல்நாடுகளுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்துதல், இருதரப்பு கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துதல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை உலக அரங்கில் முன்னிலைப்படுத்துதல் மற்றும் சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம் அதன் நோக்கத்தை அடைய வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில், இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை நடத்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதே போல, பாரம்பரிய நடனம், தற்கால நடனம், பாரம்பரிய இசை, மெல்லிசை, நாடகம் போன்ற பல்வேறு கலாச்சாரத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் வெளிநாடுகளில் 'இந்தியாவின் விழாக்களில்' கலந்துகொள்கின்றனர்.
இந்தியாவிற்கும் சம்பந்தப்பட்ட அயல்நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்புறவையும் கலாச்சார தொடர்புகளையும் வளர்க்கும் நோக்கத்துடன், நமது இந்திய தூதரகங்கள் மூலம் அயல்நாடுகளில் செயலூக்கத்துடன் செயல்படும் இந்தோ அயல்நாட்டு நட்புறவு பண்பாட்டு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்த கலாச்சார அமைச்சகம் பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115745
***
TS/PKV/SG/KR/DL
(Release ID: 2115874)
Visitor Counter : 36