சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலைகளின் தரநிலை பராமரிப்பு

Posted On: 27 MAR 2025 2:52PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளதுடன், அனைத்து தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளின் பராமரிப்பு, பழுதுபார்த்தல் பணிகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அத்துறையின் பராமரிப்பு முகமை மூலம் உருவாக்கி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் திட்டங்கள் மூன்று முறைகளில் செயல்படுத்தப்படுகின்றன, அவை: (i) கட்டமைத்தல், செயல்படுத்துதல், மாற்றியமைத்தல் (ii) ஹைப்ரிட் மாதிரி, (iii) பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம் போன்ற திட்டங்களுக்கான பராமரிப்புக் காலம் 15 முதல் 20 ஆண்டுகளாகும். இதில் ஹைப்ரிட் அடிப்படையிலான திட்டத்திற்கு 15 ஆண்டுகள் பராமரிப்புக் காலம் வழங்கப்படுகிறது.  இந்த பராமரிப்புக் காலத்திற்குள் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை பராமரிப்பது ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும். பொறியியல் கொள்முதல், கட்டுமானத்திற்கான பொறுப்புக் காலம், தார்ச் சாலைப் பணிகளுக்கு 5 ஆண்டுகளும், கான்கிரீட் நடைபாதை பணிகளுக்கு 10 ஆண்டுகளும் ஆகும்.

கட்டணம்-செயல்பாடு-பரிமாற்றம் மற்றும் உள்கட்டமைப்புக்கான முதலீட்டு திட்டங்களுக்கு, பராமரிப்பு உட்பட பணிகளுக்கான பொறுப்புக் காலம் 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.

 

எஞ்சியுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அதனை பராமரிப்பதற்கான  பொறுப்பு காலம் முடிவடைந்தவுடன் அல்லது பிற திட்டங்களின் கீழ் அதற்கான பராமரிப்புக் காலத்தின் செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் அல்லது குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115681

***

TS/SV/RJ/KR


(Release ID: 2115769) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi , Bengali