சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பில் பக்கவாட்டு சேவை சாலைகள்
Posted On:
27 MAR 2025 2:53PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பக்கவாட்டு சேவை சாலைகள் உட்பட தற்போதைய நெடுஞ்சாலைக் கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், அனைத்து தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகளை உறுதி செய்வதற்கான வழிமுறையானது சாலை பராமரிப்பு முகமை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டது முதல் அல்லது அதன் செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகள் போன்ற பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் பொறுப்பாகும். இதேபோல், சுங்கச் சாவடிகளின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான அறக்கட்டளை ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்குப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்பந்தக் காலம் முடியும் வரை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமே உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் எஞ்சியுள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் அல்லது குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கொள்கை முடிவை மேற்கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவாகச் செல்லும் வாகனங்கள் அல்லாத பிற வாகனங்கள் உட்பட உள்ளூர் போக்குவரத்திற்கான பாதைகளை பிரிக்கும் வகையில், நகர்ப்புற / புறநகர் பகுதிகளில் பக்கவாட்டுச் சேவை சாலைகள் அமைக்கப்படுகின்றன. திருப்பங்களில் வாகனங்கள் செல்ல ஏதுவாக மேம்பாலங்கள் / பல்வழிச்சாலை மேம்பாலங்கள் / பல்வழிச்சாலை மேம்பாலங்கள் / வாகன கீழ்ப்பாதைகள் அமைக்கப்படுகின்றன.
கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரகப் பகுதிகள் மற்றும் குறைவான வசதிகள் உள்ள பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் பக்கவாட்டுச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115683
***
TS/SV/RJ/KR
(Release ID: 2115768)
Visitor Counter : 54