சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
27 MAR 2025 2:56PM by PIB Chennai
அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் போடோலாந்து பகுதி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்ட, ஒப்புதல் அளிக்கப்பட்ட, இன்னும் தொடங்கப்படாத தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான செலவுகளை சமாளிக்க மாநில வாரியாக நிதி ஒதுக்கப்படுகிறது. அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ரூ.43,322 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ரூ.4,352 கோடி மதிப்பிலான திட்டங்கள் 2024-25-ம் ஆண்டில் நிறைவடைந்துள்ளன. ரூ.77,362 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
(Release ID: 2115685)
TS/PLM/KPG/KR
(रिलीज़ आईडी: 2115757)
आगंतुक पटल : 64