ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 26 MAR 2025 4:24PM by PIB Chennai

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், இதுவரை 509.8 கோடி ரூபாய் மதிப்பிலான 168 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இழை துறைகளில் அடிப்படை ஆராய்ச்சி, புவிசார் ஜவுளி, வேளாண் ஜவுளி, மருத்துவ ஜவுளி, விளையாட்டு ஜவுளி ஆகியவற்றில் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ஆராய்ச்சித் திட்டங்களின் முடிவுகள் மூலம், நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பரவலை மேம்படுத்துவதையும், தொழில்நுட்ப ஜவுளிகளை உற்பத்தி செய்வதற்கான சிறந்த சூழல் அமைப்பை உருவாக்குவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இந்தத் தகவலை தெரிவித்தார்.

***

(Release ID: 2115280)

TS/PLM/SG/KR


(रिलीज़ आईडी: 2115486) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी