ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்திய ஏற்றுமதியாளர்கள்

Posted On: 26 MAR 2025 4:25PM by PIB Chennai

வர்த்தகத் துறையால் செயல்படுத்தப்படும் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ், தேசிய, சர்வதேச அளவில் வர்த்தகக் கண்காட்சிகள், வாங்குவோர்- விற்போர் சந்திப்புகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள், வர்த்தக அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளித்து வருகிறது. இதன் மூலம் இந்தியக் கண்காட்சியாளர்கள் உலகளாவிய தொடர்புகளைப் பெறுவார்கள்.

வெளிநாடுகளில்  பொருட்காட்சிகள், கண்காட்சிகள், வாங்குவோர்- விற்போர் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்வதற்கு/பங்கேற்பதற்கு சந்தை அணுகல் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தகுதி பெறும் செலவினங்கள் பின்வருமாறு:

1.     பங்கேற்பு கட்டணங்கள் / கட்டணம் மற்றும் ஒழுங்கமைப்பு செலவுகள்.

2.     வாங்குபவர் பங்கேற்புக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட விளம்பரம் / சந்தைப்படுத்தல் / விளம்பரத்திற்கு ஏற்படும் விளம்பர செலவு.

3.     மொழிபெயர்ப்பு கட்டணங்கள்;

4.     கண்காட்சிப் பொருட்களின் சரக்குக் கட்டணங்களுக்கான செலவு;

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/SG/KR/DL


(Release ID: 2115472) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi