பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்த 50 குறு,சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசனை
Posted On:
26 MAR 2025 3:19PM by PIB Chennai
பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் திரு சஞ்சீவ் குமார் தலைமையின் கீழ் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். மார்ச் 24,25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் ஆலோசனை அமர்வுகள் நடைபெற்றன.
இந்த அமர்வுகளில் கலந்து கொண்ட நிறுவனங்கள், பாதுகாப்பு சிறப்புக்கான புதுமைகள் இயக்கத்தில் இணைந்துள்ளன. விண்வெளி தொழில்நுட்பங்கள், குவாண்டம் தொழில்நுட்பங்கள், மின்னணு செயல்முறைகள், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரேடார் தொழில்நுட்பங்கள், இணையதளப் பாதுகாப்பு போன்ற முக்கியமான வளர்ந்து வரும் தொழில்நுட்ப களங்களில் விவாதங்கள் நடைபெற்றன.
பங்கேற்பாளர்களின் மதிப்புமிக்க நுண்ணறிவுகளுக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர், புதிய தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள இந்த அமர்வுகள் அமைச்சகத்திற்கு உதவும் என்று கூறினார். இது கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைச் செம்மைப்படுத்த உதவும் என்றும், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பரந்த பங்கேற்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
***
TS/PLM/SG/KR/DL
(Release ID: 2115471)
Visitor Counter : 31