ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளித் தொழிலாளர்களுக்கான திட்டங்கள்
Posted On:
26 MAR 2025 4:26PM by PIB Chennai
மேம்பாட்டு ஆணையர் (கைவினைப் பொருட்கள்) அலுவலகமானது தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான கைவினைப் பொருட்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பு, வடிவமைப்பு திட்டம், பயிற்சித் திட்டங்கள், குழும மேம்பாடு, கைவினைஞர்களுக்கு நேரடி பயன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அம்பேத்கர் கைவினைஞர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கைவினைஞர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
மேலும், வளர்ச்சி ஆணையர் (கைத்தறி) அலுவலகம் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் மற்றும் மூலப்பொருள் வழங்கல் திட்டத்தை நாடு தழுவிய அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், தகுதி வாய்ந்த கைத்தறி முகவர்கள் / நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் வாங்குதல், மேம்படுத்தப்பட்ட தறிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல், சூரிய ஒளி விளக்கு அலகுகள் வாங்குதல், தறிக்கூடம் கட்டுதல், திறன் மேம்பாடு, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பொது உட்கட்டமைப்பு வசதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறி பொருட்களை விற்பனை செய்தல், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் சலுகைக் கடன்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நாடு தழுவிய அளவில் ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அமைப்பு சார்ந்த துறைகளில் நூல் நூற்பு மற்றும் நெசவு நீங்கலாக, ஜவுளி மதிப்புக் கூட்டல் சங்கிலித் தொடரை உள்ளடக்கி, அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்துறையின் முயற்சிகளுக்கு உறுதுணையாக, தேவை அடிப்படையிலான, பணியமர்த்தல் அடிப்படையிலான தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) திறன் மேம்பாட்டு பயிற்சியை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் வழங்குகிறது.
இந்தத் தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கரிட்டா மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2115432)
Visitor Counter : 17