பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதும் 36000 முதன்மைப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAR 2025 3:45PM by PIB Chennai
மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து ஆகிய சேவைகளை வழங்குவதற்கான திறனை வலுப்படுத்துவதற்காக அனைத்து அங்கன்வாடி பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 10 மே 2023 அன்று ஊட்டச்சத்து தொடர்பான பயிற்சியான கல்வியும் ஊட்டச்சத்தும் என்ற பயிற்சி முன்முயற்சியாக அறிமுகப்படுத்தியது.
19.03.2025 நிலவரப்படி, மொத்தம் 36,027 மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கூடுதல் வள நபர்கள் மற்றும் 3,11,299 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நாடு முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடிப் பணியாளர்களின் திறன் மேம்பாடு, உயர்தர உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்ட ஒரு கற்றல் மையமாக மாற்றுவதற்கான முதல் படியாக இது அமைந்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/SG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2115427)
வருகையாளர் எண்ணிக்கை : 45