கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்

Posted On: 26 MAR 2025 2:51PM by PIB Chennai

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு 31.05.2023 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. இது மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான இதில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி, வேளாண் விற்பனை உள்கட்டமைப்புத் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம், பிரதமரின் குறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.

இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், 11 மாநிலங்களில் 11 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தானிய சேமிப்புக்கான கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகள், கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 2 லட்சம் பல்நோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நிறுவி வலுப்படுத்தும் திட்டத்தை இந்த அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதற்கென மார்க்தர்ஷிகா எனப்படும் (நிலையான இயக்க நடைமுறை) ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. 2028-29-ம் நிதியாண்டுக்குள் 218 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதற்கான  இலக்கில் கர்நாடக மாநிலத்தில் இதுவரை 128 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புக்கான முன்னோடித் திட்டத்தின் கீழ், கர்நாடக மாநிலத்தில்  பீதர் மாவட்டத்தில் உள்ள ஏகம்பாவில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனத்தில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும் கட்டப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115198  

----

TS/SV/KPG/KR


(Release ID: 2115326) Visitor Counter : 24