சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
Posted On:
26 MAR 2025 3:21PM by PIB Chennai
சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின், குறிப்பாக பொருளாதாரத்திலும் சமுதாயத்திலும் நலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நல அமைச்சகம் குறிப்பாக ஆறு அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிப்பதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது, இந்த திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மை சமூகங்களின் தேவைகளை நிறைவேற்ற கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினர் நல அமைச்சகம் பிரதம மந்திரி விகாஸ் திட்டம் என்கிற தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 'சீகோ அவுர் கமாவோ', 'உஸ்தாதாத்', 'நை மன்ஸில்', 'நை ரோஷ்னி' மற்றும் 'ஹமாரி தரோஹர்' ஆகிய ஐந்து முந்தைய திட்டங்களை ஒருங்கிணைக்கிறது; திறன் மேம்பாட்டின் மூலம் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மையினரின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது; சிறுபான்மை பெண்களின் தொழில்முனைதல் மற்றும் தலைமைத்துவம்; மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவர்களுக்கு கல்வி ஆதரவு ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டத்தின் கீழ், சிறுபான்மை சமூகங்களின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிச் சங்கத்தின் திட்டங்களின் பயனை அதிகப்படுத்தும் வகையில், கடன் வரிசை 1ன் கீழ் வருடாந்திர குடும்ப வருமான வரம்பு கிராமப்புறங்களில் ரூ.98,000 இருந்துரூ 3 லட்சம் ஆகவும் நகர்ப்புறங்களில் ரூ.1,20,000லிருந்து ரூ.3.00 லட்சமாகவும் நடப்பு நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2115212)
TS/IR/RR/KR
(Release ID: 2115321)
Visitor Counter : 23