உள்துறை அமைச்சகம்
இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக இந்திய நியாயச் சட்டம்
Posted On:
26 MAR 2025 1:42PM by PIB Chennai
இந்திய சட்ட ஆணையம் தனது பல்வேறு அறிக்கைகளில் குற்றவியல் சட்டங்களில் பிரிவு சார்ந்த திருத்தங்களைப் பரிந்துரைத்திருந்தது. மேலும், பெஸ்பரூவா குழு, விஸ்வநாதன் குழு, மாலிமத் குழு, மாதவ மேனன் குழு போன்ற குழுக்கள் குற்றவியல் சட்டங்களில் பிரிவு சார்ந்த திருத்தங்கள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் பொதுவான சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்கின.
உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் 111-வது, 128-வது, 146-வது அறிக்கைகளில், அந்தந்த சட்டங்களில் தனித்தனியாக திருத்தங்களைக் கொண்டுவருவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் ஒரு விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் விரிவான மறுஆய்வுக்கு பரிந்துரைத்தது.
அதன்படி, உள்துறை அமைச்சகம், குற்றவியல் சட்டங்களை, அதாவது இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றை விரிவான மறு ஆய்வு செய்து, அனைவருக்கும் எளிதில் நீதியை வழங்கவும், மக்களை மையமாகக் கொண்ட சட்ட கட்டமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. மேற்கண்ட மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட்டு, பாரதீய நியாய சட்டம்,பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம்
ஆகிய மூன்று புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய சட்டங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2115169)
TS/PLM/SG/KR
(Release ID: 2115230)
Visitor Counter : 31