தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாதா கர்மா நினைவு தபால் தலையை அஞ்சல் துறை வெளியிட்டது

Posted On: 26 MAR 2025 8:52AM by PIB Chennai

மதிப்பிற்குரிய துறவி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் கிருஷ்ணரின் தீவிர பக்தரான மாதா கர்மாவின் 1009வது பிறந்த நாளையொட்டி நினைவு தபால் தலை வெளியிடப்படுவதாக மத்திய அரசின் அஞ்சல் துறை பெருமையுடன் அறிவித்தது. 2025 மார்ச் 25 அன்று ராய்ப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில்  சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர், திரு டோகான் சாஹு, சத்தீஸ்கர் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அகில பாரதிய தைலிக் மகாசபாவின் மதிப்புமிக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பகவான் கிருஷ்ணரை அர்ப்பணிப்புடன் பின்பற்றுபவரான மாதா கர்மா, அசைக்க முடியாத நம்பிக்கை, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். தனது ஆழ்ந்த பக்தியால் உந்தப்பட்டு, அவர் கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெற ஒரு பயணத்தைத் தொடங்கினார். புனித நகரமான பூரியை அடைந்ததும், கோயில் ஊழியர்கள் அவரிடம் ஒரு பாரம்பரிய உணவான கிச்சடியைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில், பகவான் கிருஷ்ணர் அவரது காணிக்கையை ஏற்றுக்கொண்டார். மாதா கர்மாவால் தொடங்கப்பட்ட இந்த மனப்பூர்வமான பாரம்பரியம், ஜகந்நாத் கோயிலின் சடங்குகளின் நீடித்த பகுதியாக மாறியது. மாதா கர்மா கிருஷ்ணருக்கு கிச்சடியை வழங்குவதை இந்த அஞ்சல்தலை அழகாகச் சித்தரிக்கிறது. பின்னணியில் மதிப்பிற்குரிய ஜகந்நாதர் கோயில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கம், மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஆன்மீக பக்தி ஆகியவற்றிற்கு மாதா கர்மாவின் பங்களிப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், தீண்டாமை மற்றும் பழமைவாதம் போன்ற பல்வேறு சமூக தீமைகளுக்கு எதிராக போராட அவரது வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட நினைவு தபால்தலை அவரது நீடித்த தாக்கத்தை அங்கீகரிப்பதோடு வருங்கால சந்ததியினருக்காக அவரது மரபைப் பாதுகாக்கிறது.

தகவல் சிற்றேடு உள்ளிட்ட அஞ்சல் தலை மற்றும் தொடர்புடைய தபால் தலை சேகரிப்பு பொருட்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள தபால் தலை சேகரிப்பு பணியகங்களிலும், ஆன்லைனில் www.epostoffice.gov.in-  என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.

***

(Release ID: 2115115)
TS/IR/RR/KR


(Release ID: 2115145) Visitor Counter : 44