தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 MAR 2025 4:29PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இது இம்மாநிலத்தில்  தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கிய முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்த அறிவிப்பின் மூலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 74 மாவட்டங்கள் இஎஸ்ஐ திட்டத்தை முழுமையாக  அமல்படுத்துகின்றன. இதன் மூலம் 30.08 லட்சம் காப்பீட்டுதார்களும் 1.16 கோடி பயனாளிகளும் பலனடைகிறார்கள் என்று அமைச்சர் திரு மாண்டவியா தெரிவித்தார்.

நாட்டில் மொத்தம் உள்ள 778 மாவட்டங்களில் முழுமையாக அல்லது பகுதி அளவாக 689 மாவட்டங்களில் இஎஸ்ஐ திட்டம்  அமல்படுத்தப்படுகிறது. திட்டம் அமலாகாமல் எஞ்சியுள்ள பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்த இஎஸ்ஐ கழகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார சிகிச்சைகள் கிடைப்பதோடு உடல்நிலை பாதிப்பு, தற்காலிக அல்லது நிரந்தர ஊனம், பேறுகாலம் (26 வாரங்கள்) போன்றவற்றுக்கு ரொக்கத் தொகையும் பலனாகக் கிடைக்கிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114861

----

TS/SMB/KPG/DL


(रिलीज़ आईडी: 2115038) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati