உள்துறை அமைச்சகம்
மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு
Posted On:
25 MAR 2025 1:40PM by PIB Chennai
மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு என்பதை மையப் பொருளாகக் கொண்டு 2018-19-ல் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒர் ஆய்வை நடத்தியது. தெரிவு செய்யப்பட்ட 10 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 5,920 பள்ளி மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 12 மாதங்களில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை விவரம்:கஞ்சா – 120 பேர் (2%); மயக்க ஊசிகள் 38 பேர் (0.6%); ஓபியம் 163 பேர் (2.8%).
2,533 கல்லூரி மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 12 மாதங்களில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை விவரம் : கஞ்சா – 159 பேர் (6.3%); ஓபியம் 9 பேர் (0.4%). ஹெராயின் 6 பேர் (0.2%); மயக்க ஊசிகள் 37 பேர் (1.5%); மயக்க ஊசிகள் 37(1.5); கோக்கெயின் 12 பேர் (0.5%).
போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் 2020, ஆகஸ்ட் 15 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பாதிக்கப்படக் கூடிய 272 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்ட போதும், தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்தத் திட்டம் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. தனிநபர்களை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை அளிக்கவும், இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ், இதுவரை, 4.96 கோடி இளைஞர்கள் 2.97 கோடி பெண்கள் உட்பட 14.79 கோடி பேருக்கு போதைப் பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த செய்தி சென்றடைவதை உறுதி செய்வதற்காக 4.16 லட்சம் கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட ஆலோசனை கிடைப்பதற்கும், உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதிலிருந்து விடுபடவும் 14446 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் பராமரிக்கப்படுகிறது.
இன்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114749
----
TS/SMB/KPG/DL
(Release ID: 2114983)
Visitor Counter : 25