வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கொதிகலன்கள் மசோதா மக்களவையில் அறிமுகம்
Posted On:
25 MAR 2025 4:16PM by PIB Chennai
கொதிகலன்கள் மசோதா, 2024-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இது கொதிகலன்கள் சட்டம், 1923 (1923-ன் 5)-ஐ ரத்து செய்கிறது. இந்த மசோதா முன்னதாக 4 டிசம்பர் 2024 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, மேலும் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
புதிதாக இயற்றப்பட்ட சட்டம் நாட்டில் உள்ள தொழில்துறையினர், கொதிகலன்களைப் பயன்படுத்தும் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் உள்ளவர்கள் உட்பட பாய்லர் பயனர்களுக்கு இந்த மசோதா பயனளிக்கும். கொதிகலன்களைக் கையாளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்தக்கூடிய நான்கு முக்கிய குற்றங்களில், குற்றவியல் தண்டனைகள் முன்பு இருந்ததன்படியே நீடிக்கும். மற்ற குற்றங்களுக்கு, நிதி அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரிமினல் அல்லாத அனைத்து குற்றங்களுக்கும் 'தண்டம்' என்பது முன்பு இருந்ததைப் போல நீதிமன்றங்களுக்கு பதிலாக நிர்வாக அமைப்பு மூலம் விதிக்கப்படும் அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.
கொதிகலனுக்குள் பணிபுரியும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கொதிகலன் பழுதுபார்ப்பது தகுதி வாய்ந்த மற்றும் தகுதிவாய்ந்த நபர்களால் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த மசோதாவில் குறிப்பிட்ட விதிகள் செய்யப்பட்டுள்ளதால், இது பாதுகாப்பை மேம்படுத்தும்.
***
TS/PLM/SG/KR/DL
(Release ID: 2114982)
Visitor Counter : 32