ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை அதிகரித்தல்

प्रविष्टि तिथि: 25 MAR 2025 5:01PM by PIB Chennai

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சந்தைப்படுத்தும் முயற்சியாக சரஸ் அத்ஜீவிகா மேளாவானது தேசிய மற்றும் மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவித்து மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, ஏற்றுமதி வாய்ப்புள்ள சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளைகா காட்சிப்படுத்துவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சரஸ் அத்ஜீவிகா மேளா 2025-ல் ஏற்றுமதி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. சுய உதவிக் குழுக்களின் திறனை மேம்படுத்தவும், ஏற்றுமதி திறனை உருவாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயிற்சி அமர்வுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் 2024 மே 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தேசிய அளவிலான பயிலரங்கை நடத்தி, 'சுய உதவிக் குழுக்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களின் ஏற்றுமதி சந்தைப்படுத்தல்' நோக்கம் குறித்து விவாதித்து இருந்தது. தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் சந்தைப்படுத்தல் பகுதியின் கீழ், ஜவுளி அமைச்சகம், கைவினைஞர்களுக்கு சந்தைப்படுத்தும் தளத்தை வழங்கவும், கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது:

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/IR/RR/KR/DL


(रिलीज़ आईडी: 2114968) आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी