நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,2019-இன்கீழ் நுகர்வோர் உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்கிறது
Posted On:
25 MAR 2025 3:44PM by PIB Chennai
நுகர்வோர் விவகாரங்கள் துறை, முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறது. உலகமயமாக்கலின் புதிய சகாப்தத்தில் நுகர்வோர் பாதுகாப்பை நிர்வகிக்கும் கட்டமைப்பை நவீனப்படுத்தும் நோக்கில், பழைய சட்டம் மாற்றப்பட்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இயற்றப்பட்டது.
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் முக்கிய அம்சங்கள்:
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்துதல். நுகர்வோர் ஆணையங்களின் பண அதிகார வரம்பை மேம்படுத்துதல், பரிவர்த்தனை இடத்தைப் பொருட்படுத்தாமல் இணையதளத்தில் புகார் அளித்தல், விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங், தாக்கல் செய்த 21 நாட்களுக்குள் ஏற்பு முடிவு செய்யப்படாவிட்டால் புகார்களை ஏற்பதாகக் கருதுதல், தீர்ப்பு செயல்முறையை எளிமைப்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், நியாயமற்ற வணிக நடைமுறைகளை தடுப்பதற்காகவும், நுகர்வோர் தகராறுகளுக்கு எளிய, விரைவான தீர்வு காணவும், வழிவகை செய்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114829)
TS/PLM/SG/KR
(Release ID: 2114915)
Visitor Counter : 32