கூட்டுறவு அமைச்சகம்
பாரத் பீஜ் வணிகச் சின்னம்
Posted On:
25 MAR 2025 1:35PM by PIB Chennai
பயிர்கள் விளைச்சலை அதிகரிக்க கூட்டுறவு வலைப்பின்னல் மூலம், பாரத் பீஜ் என்ற ஒற்றை வணிகச் சின்னம் உள்ள தரமான விதைகளின் உற்பத்தி, கொள்முதல், விநியோகத்தை இந்திய விதைகள் கூட்டுறவு சங்கம் மேற்கொள்கிறது. இதுவரை இந்த அமைப்பில் 19,674 கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன. இவற்றில் 334 ச ங்கங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவை.
சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் பாரத் பீஜ் என்ற வணிகச் சின்னம் உள்ள தரமான விதைகளை ஏற்று பயன்படுத்துவதற்கு விழிப்புணர்வை அதிகரிக்க இந்திய விதைகள் கூட்டுறவு சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை அது மேற்கொள்கிறது.
1) சமூக ஊடகங்கள் மற்றும் இந்திய விதைகள் கூட்டுறவு சங்கம் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம்
2) பல்வேறு நிலைகளில் விவசாயிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல்
3) பிராந்திய அளவில் பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல்
4) தேசிய, மாநில, பிராந்திய நிலைகளில் செயல் விளக்கங்களை காட்சிப்படுத்துதல், ஊக்குவிப்பு நிகழ்வுகளில் பங்கேற்றல்.
சந்தையில் தரமான விதைகள் விற்பனையை முறைப்படுத்த விதைகள் சட்டம் 1966, விதைகள் தொடர்பான விதிகள் 1968, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983 ஆகியவற்றில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
இன்று மக்களவையில் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114743
----
TS/SMB/KPG/KR
(Release ID: 2114901)
Visitor Counter : 20