கூட்டுறவு அமைச்சகம்
பன்னோக்கு தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள்
Posted On:
25 MAR 2025 1:39PM by PIB Chennai
நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அடித்தள நிலை வரை அதனை விரிவுபடுத்தவும் திட்டம் ஒன்றுக்கு மத்திய அரசு 2023 பிப்ரவரி 13 அன்று ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் 5 ஆண்டு காலத்திற்கு அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால்வள, மீன்வள கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படுவதை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் உள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின், 2025 ஜனவரி 27 நிலவரப்படி, தேசிய கூட்டுறவு தரவுத் தொகுப்பு அடிப்படையில் 12,957 புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களும், பால்வள, மீன்வள கூட்டுறவு சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ்நாட்டில், 21 புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களும், 478 பால்வள கூட்டுறவு சங்கங்களும், 21 மீன்வள கூட்டுறவு சங்கங்களும் என மொத்தம் 520 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 2 புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களும், 2 பால்வள கூட்டுறவு சங்கங்களும், 3 மீன்வள கூட்டுறவு சங்கங்களும் என மொத்தம் 7 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, இதுவரை 42,080 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களாகவும், 36,193 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் பிரதமரின் வேளாண் வள மையங்களாகவும் செயல்படுகின்றன. 22,311 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள நியாயவிலைக் கடைகளாக செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் 3183 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் பிரதமரின் வேளாண் வள மையங்களாகவும், 4453 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்களாகவும் செயல்படுகின்றன. 3949 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள நியாயவிலைக் கடைகளாகச் செயல்படுகின்றன.
புதுச்சேரியில் 6 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் பிரதமரின் வேளாண் வள மையங்களாகவும், 27 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்களாகவும் செயல்படுகின்றன. 1 தொடக்க வேளாண் கடன் சங்கம் நியாயவிலைக் கடையாக செயல்படுகிறது.
இன்று மக்களவையில் மத்திய கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114747
-----
TS/SMB/KPG/KR
(Release ID: 2114893)
Visitor Counter : 29