மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
உலகளாவிய பால்வளத் தொழில்
Posted On:
25 MAR 2025 12:46PM by PIB Chennai
இந்தியா 1998 முதல் உலக அளவில் பால் உற்பத்தியில் முதலாவது இடத்தில் உள்ளது. தற்போது உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா 25 சதவீதப் பங்களிப்பு செய்கிறது. 2014-15 ஆண்டில் 146.3 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி 2023-24 ஆண்டில் 239.2 மில்லியன் டன்னாக அதிகரித்து இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வருடாந்திர பால் உற்பத்தி அதிகரிப்பு சதவீதம் 5.7 ஆகும். உலக அளவில், பால் உற்பத்தி ஆண்டுக்கு 2 சதவீதம் அதிகரிக்கும் நிலையில், இந்தியாவில் வருடாந்தர பால் உற்பத்தி அதிகரிப்பு விகிதம் 5.7 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் பால் நுகர்வு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைக்கும் பாலின் அளவு 322 கிராமாக உள்ள நிலையில், 2023-24-ல் இந்தியாவில் இந்த அளவு 471 கிராமாக இருந்தது.
மாநில அரசுகளால் பால் உற்பத்திக்கும் பால் பதப்படுத்துதலுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், மத்திய கால் நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையானது தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், கால்நடை பராமரிப்புக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய கோகுல் இயக்கம் போன்ற பல திட்டங்களை அமல்படுத்துகிறது.
பால் மூலம் கிடைக்கின்ற ஊட்டச்சத்து பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசின் அதிகாரப்பூர்வ அலைவரிசைகள் மூலம் சமூக ஊடக பிரச்சாரங்களுக்கு இந்தத் துறை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகல் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114715
---
TS/SMB/KPG/KR
(Release ID: 2114887)
Visitor Counter : 19