தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் சில உயர் சாதி சிறுவர்களால் ஒரு எஸ்சி மாணவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

Posted On: 25 MAR 2025 3:38PM by PIB Chennai

தூத்துக்குடி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் எஸ்சி மாணவன் ஒருவன் உயர் சாதி மாணவர்களால் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம்  தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமது தேர்வுக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணித்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளால் அவர் பேருந்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு அரிவாளால் தாக்கப்பட்டதில் அவரது இடது கையில் இருந்து விரல்கள் துண்டிக்கப்பட்டன. இதில் தலையிட முயன்ற சிறுவனின் தந்தையும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்செய்தி தொடர்பாக இடம்பெற்ற அம்சங்கள் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் கடுமையான மீறப்பட்டுள்ளதாக ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.  எனவே, இது குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

12.03.2025 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர், சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவக் குழுவினர் சிறுவனின் விரல்களை மீண்டும் இணைத்தனர்.

***

(Release ID: 2114825)
TS/IR/RR/KR


(Release ID: 2114869) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Malayalam