சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: மாற்றுத்திறனாளிகள் கலைக் கண்காட்சி
Posted On:
25 MAR 2025 2:53PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் கலைக் கண்காட்சியை நடத்துகிறது. நாடு முழுவதும் டிசம்பர் 2022 முதல் இதுவரை 24 மாற்றுத்திறனாளிகள் கலைக் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றுத்திறனாளிகள் கலைக் கண்காட்சிகளில் சுமார் 1550 மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் மற்றும் கைவினைஞர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்த ரூ.16.80 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த கண்காட்சியின் போது, தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் கடன் திட்டத்தின் கீழ் 919 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.17.42 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114799)
TS/IR/RR/KR
(Release ID: 2114867)
Visitor Counter : 19