ஜல்சக்தி அமைச்சகம்
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்கள்
Posted On:
25 MAR 2025 2:15PM by PIB Chennai
கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் இதுவரை 2.53 லட்சம் சமுதாய சுகாதார வளாகங்கள் மற்றும் 11.83 கோடி தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
20-03-2025 தேதி வரை 5,64,157 கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக(ஓ.டி.எஃப். பிளஸ் )அறிவிக்கப்பட்டுள்ளன.
20-03-2025 வரை 5,03,973 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மையும், 5,22,599 கிராமங்களில் கழிவு நீர் மேலாண்மையும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114776)
TS/PLM/SG/KR
(Release ID: 2114862)
Visitor Counter : 20