சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மேம்பாடு

प्रविष्टि तिथि: 25 MAR 2025 1:50PM by PIB Chennai

ஆயுஷ்மான் ஆரோக்கிய மைய இணையதளத்தில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 பிப்ரவரி வரை நாடு முழுவதும் மொத்தம் 1,76,573 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்படுகின்றன. உயர் ரத்த அழுத்தத்திற்கான 107.10 கோடி பரிசோதனைகளும், நீரிழிவு நோய்க்கான 94.56 கோடி பரிசோதனைகளும் இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் நடத்தப்பட்டுள்ளன.

யோகா, சைக்கிள் ஓட்டுதல், தியானம் போன்ற ஆரோக்கியம் தொடர்பான நடவடிக்கைகள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் நடத்தப்படுகின்றன. 28.02.2025 நிலவரப்படி, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் யோகா உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்தில் மொத்தம் 5.06 கோடி ஆரோக்கிய அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114759)
TS/IR/RR/KR

 


(रिलीज़ आईडी: 2114814) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi