மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பொது விழிப்புணர்வு மற்றும் விலங்குகள் நலனில் பங்கேற்பு
Posted On:
25 MAR 2025 12:49PM by PIB Chennai
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் பிரிவு 9 (கே)-ன் கீழ், விலங்குகளை மனிதாபிமானத்துடன் நடத்துவது குறித்த பொதுக் கல்வியை வழங்குவதும், விலங்குகளுக்கு தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஊக்குவிப்பதும் ஆகும். விரிவுரைகள், புத்தகங்கள், சுவரொட்டிகள், ஒளிப்பதிவுக் கண்காட்சிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வழிகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும், குறிப்பாக பள்ளி மாணவர்கள் பிராணிகள் நல முயற்சிகளில் பங்கேற்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் நலச் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் சிறு புத்தகங்களை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டு வருகிறது. விலங்குகள் நலச் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் 25 மார்ச் 2025 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2114719)
TS/PLM/SG/KR
(Release ID: 2114794)
Visitor Counter : 38