மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை கணக்கெடுப்பு
Posted On:
25 MAR 2025 12:51PM by PIB Chennai
கால்நடை கணக்கெடுப்பு என்பது கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் வழக்கமான பணியாகும். முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919 ஆம் ஆண்டிலும், 20வது கால்நடை கணக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்டது. 21வது கால்நடை கணக்கெடுப்பு 2024 அக்டோபர் 25 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இது 2025 மார்ச் 31 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பசு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, நாய், முயல், பன்றி, குதிரை, குதிரை, கழுதை, கோவேறு கழுதை, ஒட்டகம், யானை மற்றும் கோழியினப் பறவைகள் உள்ளிட்ட 15 வகையான வீட்டு விலங்குகள் கணக்கெடுக்கப்படுகின்றன. சிறந்த கொள்கை வகுப்பிற்காக கால்நடைகள் மற்றும் இனங்களின் போக்குகளை மதிப்பிடுதல், உள்நாட்டு மற்றும் அயலின இனங்கள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கத் திட்டங்களுக்காக புள்ளி விவரங்களை ஒருங்கிணைத்தல், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்குதல் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான முயற்சிகள் ஆகியன இந்தக் கணக்கெடுப்பின் நோக்கங்களாகும்.
இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் 25 மார்ச் 2025 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Release ID: (2114720)
TS/PLM/SG/KR
(Release ID: 2114757)
Visitor Counter : 35