பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள்
Posted On:
24 MAR 2025 4:35PM by PIB Chennai
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் குறித்து பொதுத்துறை நிறவனங்கள் உரிய முடிவை மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ.94.77 மற்றும் ரூ.87.67 ஆக குறைந்துள்ளது (தில்லி விலை). அரசு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசு 2021 நவம்பர் 2022 மே 2022 ஆகிய இரண்டு தவணைகளில் பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு முறையே ரூ.13 மற்றும் ரூ.16 வரை குறைத்தது. இதன் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. சில மாநில அரசுகளும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில விற்பனை வரி விகிதங்களைக் குறைத்தன. 2024 மார்ச் மாதத்தில் பெட்ரோல், டீசலுக்கான சில்லறை விலையை லிட்டருக்கு தலா ரூ.2 வரை குறைத்தன.
உலக அளவில் அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வரும் ஒரே பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114428
**
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2114594)
Visitor Counter : 24