வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பீகார், ஒடிசா, மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை திட்ட கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது
प्रविष्टि तिथि:
24 MAR 2025 3:18PM by PIB Chennai
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாடு துறையின் திட்ட கண்காணிப்புக் குழு பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தியது.
63,858 கோடி ரூபாய் முதலீட்டில் 19 முக்கிய திட்டங்களில் 23 பிரச்சினைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஐந்து திட்டங்கள் அடங்கும். குறிப்பாக மூன்று மாநிலங்களிலும் உள்ள ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவமனைகள் தொடர்பாக இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தவிர, எஃகு, நிலக்கரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரயில்வே மற்றும் மின்சாரம் அமைச்சகங்கள் தொடர்பான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
***
TS/PLM/LDN/KR/DL
(रिलीज़ आईडी: 2114528)
आगंतुक पटल : 36