சுற்றுலா அமைச்சகம்
திருமணச் சுற்றுலா
Posted On:
24 MAR 2025 4:05PM by PIB Chennai
திருமணச் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளின் மேம்பாடு ஆகியவை அந்தந்த மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு முன்முயற்சிகள் மூலம் திருமண சுற்றுலா உட்பட நாட்டின் பல்வேறு சுற்றுலா ஏற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு அமைச்சகம் உறுதுணையாக உள்ளது.
உலக அரங்கில் இந்தியாவை முதன்மையான திருமணச் சுற்றுலா இடமாகக் முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட "இந்தியா சொல்கிறது , நான் செய்கிறேன்"என்ற விளம்பர இயக்கத்தை சுற்றுலா அமைச்சகம் தொடங்கியது. இந்த இயக்கம் மின்னணு சந்தை, வலைத்தளம், சமூக ஊடக பிரச்சாரங்கள், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுலா அமைச்சகமானது
ராஜஸ்தான் அரசின் சுற்றுலாத் துறை மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து 2024 மே 5 அன்று ஜெய்ப்பூரில் கிரேட் இந்தியா சுற்றுலா சந்தையில்"இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்"' கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருமண ஏற்பாட்டாளர்கள், மாநில அரசுகள், ஊடகங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்களால் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114406)
TS/IR/RR/KR
(Release ID: 2114454)
Visitor Counter : 33