புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹேக்கத்தானில் இருந்து கிடைத்த நுண்ணறிவுத் திறம்

Posted On: 24 MAR 2025 3:05PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது மைகவ் உடன் இணைந்து 25.2.2025 முதல் 31.03.2025 வரையிலான காலகட்டத்தில் 'இந்திய அரசு புள்ளிவிவரத்துடன் புதுமைக் கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் தரவு காட்சிப்படுத்தல் ஹேக்கத்தான் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சகத்தால் உருவாக்கப்படும் தரவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு / இயந்திர கற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு தரவையும் காட்சிப்படுத்தி அதன் மூலம் பகுப்பாய்வுக்கு தரவைப் பயன்படுத்த உதவுதலில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு ஹேக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மேலும் தரவுகளை திறம்படப்  பயன்படுத்துவதற்கு தரவுக் காட்சிப்படுத்தலில் இருந்து  பெறப்பட்ட நுண்ணறிவுகள் பகிரப்படும்.

நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே தரவு கல்வியறிவு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வை மேம்படுத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

அமைச்சகத்தால் உருவாக்கப்படும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன, மேலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவதற்காக அமைச்சகத்தின் சமூக ஊடகங்கள் மூலமும் இவை பரப்பப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / ஆராய்ச்சி நிறுவனங்களில் பட்டப்படிப்பு / முதுகலை அல்லது ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அல்லது படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு 'அதிகாரப்பூர்வ புள்ளியியலில் தேசிய உள்ளகப் பயிற்சி' திட்டத்தின் கீழ் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளை மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம் வழங்குகிறது.

அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் உதவி வழங்கும் அம்சத்தின் கீழ் நிதி உதவி அளிப்பதன் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர ஆராய்ச்சியை மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம் ஊக்குவித்துள்ளது.

தேசிய புள்ளியியல் அமைப்புகள் பயிற்சி அகாடமி மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் புள்ளியியல் / பொருளாதாரம் / சமூக அறிவியல் துறைகளின் துறைத் தலைவர்கள் மற்றும் இளங்கலை / முதுகலை மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.

பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளின் வளாகங்களில் புள்ளியியல் / பொருளாதாரம் / சமூக அறிவியல் துறைகளின் இளங்கலை / முதுகலை மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ புள்ளியியல் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிலரங்கையும் ஏற்பாடு செய்கிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை (தனிப்பொறுப்பு), திட்டமிடல் துறை (தனிப்பொறுப்பு), கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114356)
TS/IR/RR/KR

 


(Release ID: 2114446) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi