ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறி நெசவாளர்களுக்கான நலத் திட்டங்கள்
Posted On:
24 MAR 2025 12:08PM by PIB Chennai
4-வது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பு 2019-20-ன் படி, நாடு முழுவதும் 35,22,512 கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 1,690 கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளனர்.
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான நலனைப் பாதுகாக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டு வருமானம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதி உதவியும், அவர்களது குழந்தைகளுக்கு (அதிகபட்சம் 2 குழந்தைகள் வரை) மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிதியுதவி பெறும் ஜவுளி நிறுவனங்களில் பட்டயப் படிப்பு அல்லது இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.2.00 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டங்களான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா இழப்பீடு திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் இயற்கை, விபத்துக்களால் ஏற்படும் மரணம் அல்லது முழு உடல் ஊனம் ஏற்பட்டால் அவர்களுக்கு காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில், இந்த இரண்டு காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடந்த மூன்று நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மத்திய ஜவுளி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114276
-----
TS/SV/KPG/KR
(Release ID: 2114421)
Visitor Counter : 33