விவசாயத்துறை அமைச்சகம்
வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்
Posted On:
24 MAR 2025 2:21PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மோடி அரசு விவசாயிகளுக்கு உகந்த அரசு என்றும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்குவதும், நியாயமான விலையை உறுதி செய்வதும் அதன் முன்னுரிமை மற்றும் உறுதிப்பாடு என்றும் கூறினார். முன்னதாக வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.
ஆனால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கி, விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைக்கத் தொடங்கியபோது, வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40%-லிருந்து 20%-மாக குறைக்க அரசு முடிவு செய்தது என்று திரு சவுகான் தெரிவித்தார். இன்று 20% ஏற்றுமதி வரியையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை நீக்குவது, நமது விவசாயிகள் கடினமாக உழைத்து சம்பாதித்த விளைபொருட்கள் உலகளாவிய சந்தைகளை வரியின்றி அடையவும், சிறந்த மற்றும் அதிக லாபகரமான விலையைப் பெறவும் உதவும்.
***
(Release ID: 2114339)
TS/IR/RR/KR
(Release ID: 2114382)
Visitor Counter : 50