நித்தி ஆயோக்
குஜராத் காந்திநகர் கிப்ட் நகரில் 'இந்திய புத்தாக்கப் படைப்புச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைப்பை உருவாக்குதல்' என்ற தலைப்பில் நிதி ஆயோக் தேசிய பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
24 MAR 2025 11:52AM by PIB Chennai
குஜராத் காந்திநகர் கிப்ட் நகரில் 'இந்திய புத்தாக்கப் படைப்பு சூழல் அமைப்பில் ஒருங்கிணைப்பை உருவாக்குதல்' என்ற தலைப்பில் 2025 மார்ச் 22 அன்று நிதி ஆயோக் தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த தேசிய மாநாட்டை நிதி ஆயோக் ஏற்பாடு செய்ய, குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமம் நடத்தியது.
அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் இதில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களிடையே உரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வு நடைபெற்றது. துறைகளில் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகள், கண்டுபிடிப்பு குறித்த மாநிலக் கொள்கைகள், உலகளாவிய கண்டுபிடிப்பு போக்குகள் மற்றும் சாதாரண சூழல்களில் தொழில்முனைவு போன்ற முக்கியமான தலைப்புகளில் பயிலரங்கு நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கில் நிதி ஆயோக்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி மோனா கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களின் பங்கேற்பானது புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.
இப்பயிலரங்கில் உரையாற்றிய டாக்டர் வி.கே.சரஸ்வத், நாட்டின் புத்தாக்கக் கண்டுபிடிப்பு சூழலை முன்னெடுத்துச் செல்வதில் அரசு அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். புதுமையை நோக்கிய உலகளாவிய மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தேவையான புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
***
(Release ID: 2114268)
TS/IR/RR/KR
(Release ID: 2114303)